Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியவர்களின் சமூக கணக்குகளை முடக்க உத்தரவு!



முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில், 2 வழக்குகளின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 41 வழக்குகள் துப்புதுலக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதில் சைபர் கிரைம் போலீசாருக்கு உதவும் நோக்கில் சைபர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவதூறு பரப்பியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்ததும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவதூறு பரப்பியவர்களின் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் கணக்குகளை முடக்க அந்நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.