உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் ஷாகேங் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், கடந்த 18 ஆம் திகதி இரவு பயணிகள் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
பயணத்தின் போது அவர் ரெயிலின் கடைசி பெட்டிக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த சில பயணிகள் இப்பெண்ணிடம் சற்று கடினமாக நடந்துள்ளனர்.
அதில் 3 பேர் அப்பெண்ணை வற்புறுத்தலாக பாலியல் பலாத்காரம் செய்து, ரயிலை விட்டு வெளியே தூக்கி எறிந்துள்ளனர்.
இதனால் அப்பெண் ரயிலின் தண்டவாளத்திற்கு மத்தியில் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் சத்தம் போட்டுக் கொண்டே சென்றனர்.
ஆனால் அதற்குள் அவரது வலது கால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ரயில் காஜாகுர்டு ரெயில் நிலையத்தில் நின்றதால் அங்கு இருந்த பொதுமக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சில இடங்களில் தையல் போட்டுள்ளதாகவும், அவருக்கு தேவையான இரத்தத்தை இராணுவ அதிகாரிகள் கொடுத்துள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.