October 25, 2016
பிறந்த குழந்தையை பெட்டிக்குள் போட்டு சென்ற தாய் கைது!
யாழில் பிறந்த குழந்தையை பெட்டிக்குள் போட்டு சென்ற மூன்று பிள்ளைகளின் தாய் கைது!
யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் அண்மையில் உயிருடன் மீட்கப்பட்ட சிசுவின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலையில் கோவிலொன்றுக்கு அருகில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டிருந்தது.
பிறந்து 10 நாட்கள் நிரம்பிய சிசுவை அதன் தாயார் கைவிட்ட நிலையில், கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து குறித்த சிசுமீட்கப்பட்டிருந்தது.
பொலிசாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சிசு மீட்கப்பட்டிருந்ததுடன் இன்று காலை சிசுவின் 36 வயதான தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் ஏற்கனவே மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சிசுவின் தாய் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார்.
சிசு தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேகாரோக்கியத்துடன் சிசு உள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
பிறந்த குழந்தையை பெட்டிக்குள் போட்டு சென்ற தாய் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.