October 12, 2016
தமிழகத்தில் குடிநீர் வசதியற்ற கிராமங்களின் நிலைகுறித்த செய்தித்தொகுப்பு
நகரங்களில் அனைத்து வசதிகளும் கொட்டிக் கிடக்கும் நிலையில், குடிப்பதற்குத் தண்ணீர் கூட இல்லாத, அரசால் கவனிக்கப்படாத சில கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் உள்ளன. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பே இது.
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர். அதற்குத்தான் இன்று பல இடங்களிலும் பிரச்சனை. விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டுமென ஒருபுறம் பெரிய களேபரங்கள் நடந்துவரும் நிலையில், குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என கையேந்துகின்றனர் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மஜீத் தெரு மக்கள். தருமபுரி மாவட்டத்தின் கவனிக்கப்படாத கிராமங்களில் இதுவும் ஒன்று. இவர்களின் தொழில் என்னெவோ ஓலை பின்னுவதுதான். ஆனால் குடி தண்ணீருக்காக நடையாய் நடப்பதுவே, மஜீத் தெரு மக்களின் முக்கிய வேலையாகி விட்டது.
பெற்றோருக்கு உதவியாக, குழந்தைகளும் குடிதண்ணீர் எடுக்கச் செல்கின்றன. அப்படி போவதால், அந்த குழந்தைகளால், குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை. தண்ணீர் தேடி அலைவதால், மாதத்திற்கு சுமார் 10 நாட்கள் வரை, விடுமுறை எடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
தவித்த வாய்க்கு தண்ணீர் தேடி காடு, மேடாக அலையும், மஜீத் தெரு மக்கள், பஞ்சாயத்து முதல், ஆட்சியர் அலுவலகம் வரை சென்றும், கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவே இல்லை. அவ்வப்போது நடத்திய போராட்டங்களும் கைகொடுக்கவில்லை.
இனியும், குடிநீர் குழாய் அமைக்கவில்லை எனில், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தவுடன் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் இராஜ ஆறுமுகம் கூறினார்.
தமிழகத்தில் குடிநீர் வசதியற்ற கிராமங்களின் நிலைகுறித்த செய்தித்தொகுப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.