Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 30, 2016

சுட்ட மீன் சாப்பிடுங்க..ஞாபக மறதிய விரட்டுங்க..!


மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர்.மூளைக்கு தேவையான அத்தனை பலன்களுக்கும் ஒமேகா அமிலம் சிறந்தது.

ஆனால், அதை விட சிறப்பான தகவல் ஒன்றை, தற்போது, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது யாதெனில், வாரம் ஒரு முறை சுட்ட மீன் சாப்பிட்டால், அது மூளைக்கு மிக மிக நல்லது.
அது, திறம்பட செயல்பட உதவும் என்பதே. சுட்ட மீனில், ‘ஒமேகா-3’ அமிலம் இருந்தாலும், அதனால், பிரச்னை ஏற்படாது என்றும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும், சுட்ட மீன் சாப்பிடும் போது, வாழ்க்கையின் பிற்பகுதியில், நினைவுச் சிதைவு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
சுகாதாரத் துறையினர் எடுத்த கணக்கெடுப்புப்படி பார்த்தால், வரும், 2040ம் ஆண்டில், எட்டு கோடி பேர், நினைவுச் சிதைவு நோயால் பாதிக்கப்படலாம்; 52 லட்சம் பேர், நினைவுத் திறன் இழப்பு நோயால் பாதிக்கப்படலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ அமிலத்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, மூளை பலம் அடையலாம் என, முந்தைய ஆய்வுகளிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுட்ட மீன் சாப்பிடுவதன் மூலம், இந்த மகத்துவம் மேலும் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘நாங்கள் சைவர்கள் ஆச்சே, நாங்கள் எப்படி சுட்ட மீன் சாப்பிட முடியும்’ என, சில தரப்பினர் கேட்கலாம். மீனில் உள்ள ஒமேகா -3 அமிலச் சத்து போல, சில வகை விதைகள், பருப்புகள், சில வகை எண்ணெய்களிலும், இந்தச் சத்து உள்ளது. அதைச் சாப்பிட்டால், சைவர்களுக்கு, சுட்ட மீன் சாப்பிட்டதன் பலன் கிடைத்து விடும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.