October 26, 2016
ஆதார் கார்டு இல்லாததால் பரிதாபமாக பலியான தலித் வாலிபர்
ஆதார் கார்டு இல்லாததால் ரேஷனில் பொருள் வழங்க மறுத்ததால் பட்டினி கிடந்து தலித் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டம் தாருதா கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திரா (வயது 28). தலித் சமூகத்தை சேர்ந்தவர். கூத்து கலைஞராக இருந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனைவி உடல் ஊனமுற்றவர். குழந்தைகள் இல்லை. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருந்தது. அதில் எந்த வருமானமும் இல்லை.
தர்மேந்திராவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி ஊனமுற்றவர் என்பதால் அவராலும் எந்த வேலையும் செய்ய முடியவில்லை.
தர்மேந்திராவுக்கு ரேஷன் கார்டு இருந்தது. ஆனால் அவர் ஆதார் கார்டு உரிய காலத்தில் பெறவில்லை. எனவே ரேஷனில் அவருக்கு உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர்.
இதனால் வீட்டில் உணவு பொருட்கள் இல்லாமல் தவித்தனர். அந்த ஊரைச்சேர்ந்த மக்கள் அவ்வப்போது உணவு வழங்கி வந்தனர். அவர்களும் உணவு வழங்குவதை காலப்போக்கில் நிறுத்திவிட்டனர்.
இதனால் கணவன்-மனைவி இருவரும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்தனர். இதில் பட்டினி கிடந்தே தர்மேந்திரா நேற்று காலை இறந்துவிட்டார். அவருடைய மனைவி பட்டினியால் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் வெளிவந்ததும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிக்கைகளும், டி.வி. சேனல்களும் இந்த செய்தியை பெரிதுபடுத்தி வெளியிட்டன. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அந்த வீட்டில் எந்தவித உணவு பொருளும் இல்லாமல் பரிதாப நிலையில் இருந்தது. இந்த பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
ஆதார் கார்டு இல்லாததால் பரிதாபமாக பலியான தலித் வாலிபர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.