Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

பூனைக்குட்டியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி சாவு இரும்பு குழாய் உடைந்ததால் பரிதா



ஓமலூர்,
பூனைக்குட்டியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி இரும்பு குழாய் உடைந்ததால் தவறி விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.
பூனைக்குட்டி
ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி மாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான பகுதியில் உள்ள தோட்டத்தில் மணி(46), அவரது மனைவி அம்மச்சி ஆகியோர் கடந்த 2 வருடங்களாக தங்கி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.
நேற்று மணி தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்த போது சேகர் அவரிடம் கிணற்றுக்குள் பூனைக்குட்டி விழுந்து விட்டது என்றும், அதை காப்பாற்றி எடுத்து வருமாறும் கூறினார். கிணற்றில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது.
சாவு
இதைத்தொடர்ந்து மணி பூனைக்குட்டியை காப்பாற்றுவதற்காக தண்ணீர் செல்லும் இரும்பு குழாயில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது திடீரென இரும்பு குழாய் உடைந்தது. அதையொட்டி கயிறோடு மணி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் பின்னந்தலையில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தொளசம்பட்டி போலீசுக்கும், ஓமலூர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மணியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் பூனைக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நில உரிமையாளர் சேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.