Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

முதலமைச்சர் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறாரா? - நாளை தமிழக அமைச்சரவை அவசர கூட்டம்



முதலமைச்சர் ஜெயலலிதா சிக்ச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது பற்றியும் வேறு சில அவசர விஷயங்களை பற்றி விவாதிக்க அமைச்சரவை கூட்டம் நிதியமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் நாளை காலை நடக்க உள்ளது.
 முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப் 22 அன்று சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் உடல் நிலையை கருத்தில்  கொண்டு முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் அவர் தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை காலை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் சென்னை வந்தார். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர்  குழு மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஓரளவு பேசத்துவங்கி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நன்றி தெரிவித்தார் என முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் . இந்நிலையில் முதல்வர் லண்டனுக்கு சென்று சிகிச்சை பெற உள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன் சென்றால் விரைவில் நலம் பெற்று புதுப்பொலிவுடன் சென்னை திரும்பி ஆட்சி பொறுப்பேற்க முடியும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிகிறது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவே இந்த கூட்டம் என்று கூறுகிறார்கள்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதால் மக்கள் பிரதிநிதிகளின் பதவி முடிவடைகிறது இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்படவேண்டும். அதற்கான ஒப்புதலை கவர்னர் அளித்துவிட்ட நிலையில் தனி அதிகாரிகள் நியமிக்கும் முடிவை எடுத்து அரசிதழில் வெளியிட வேண்டும் அது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
 மேலும் 3 தொகுதிகள் இடைத்தேர்தல் வர உள்ளதால் அது பற்றியும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் காவிரி பிரச்சனை மற்றும் மற்ற அத்யாவசிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.