October 3, 2016
ஜெயலலிதா உடல் நிலை குறித்து தவறான தகவல்: தமிழச்சி மீது அவதூறு வழக்கு பதிவு
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக பிரான்சை சேர்ந்த தமிழச்சி என்பவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சரின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல் பதிவிட்டதாக பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழச்சி என்பவர் மீது, திருப்பரங்குன்றம் அதிமுக பிரமுகர் மோகன்தாஸ், மதுரை குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தமிழச்சி மீது போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்
ஜெயலலிதா உடல் நிலை குறித்து தவறான தகவல்: தமிழச்சி மீது அவதூறு வழக்கு பதிவு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.