October 17, 2016
ஜெயலலிதா குணமடைய சாமி ஆடிய பெண் மயங்கி விழுந்து மரணம்!
விருதுநகர் : முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய அதிமுகவினரால் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில், சாமியாடியபடி மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரது தொண்டர்கள், பல்வேறு சிறப்பு பூஜை, வழிபாடு, யாகம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று விருதுநகர், திருத்தங்கலில் உள்ள நின்ற நாராயண பெருமாள் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முருகன் காலனியை சேர்ந்த பொன்னுத்தாய் என்ற பெண்ணுக்கு கோயில் வளாகத்தில் திடீரென சாமி வந்து ஆடினார். அதோடு குலவையிட்டபடி திடீரென மயங்கி விழுந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த செய்தி அப்பகுதி மக்களை மிகவும் சோகமடையச் செய்தது.
ஜெயலலிதா குணமடைய சாமி ஆடிய பெண் மயங்கி விழுந்து மரணம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.