Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 11, 2016

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுக்கள் சிதறிக்கிடந்த சம்பவத்தால் பரபரப்பு



கடலூர் அருகே துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுக்கள் சிதறிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமாக இருக்குமோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள  குச்சிப்பாளையம் கிராமத்தில் வயல்வெளி ஓடையோரம் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. காகிதம் வெட்டும் இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அந்த ரூபாய் நோட்டுக்கள் காணப்பட்டன.  இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சிலர் வீட்டிற்கு அள்ளி சென்றனர். மதியம் 12மணியளவில் ஓரு மர்ம கார் அந்த இடத்தில்  நீண்ட  நேரமாக நின்றிருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ரூபாய் நோட்டுக்கள் சிதறிக் கிடக்கும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பொதுமக்கள் வீட்டிற்கு அள்ளிச்சென்ற பணதுண்டுகளையும் போலீசார் மீட்டனர்.
ரூபாய் நோட்டுகள் மிக சிறிய அளவில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதால் கள்ளநோட்டாக இருக்குமா அல்லது சமீபத்தில் இரயிலில் கொள்ளையடிக்கபட்ட பணமாக இருக்குமா  என்ற சந்தேகம் ஏழுந்துள்ளது. அந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.