Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 27, 2016

சகல தமிழர்களையும் புலிகளாக பார்த்த மஹிந்த..! தன்னையே முதலில் கொன்றிருப்பார்..! சந்திரிக்கா பரபரப்பு!!



கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால தன்னையே முதலில் கொலை செய்திருப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என எவரும் தன்னுடன் கதைக்க அச்சம் கொண்டிருந்தனர். என்னுடைய தொலைபேசி அழைப்புகளும் ஒட்டுக் கேட்கப்பட்டன.
அனைத்து சிறுபான்மையின் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அனைத்து தமிழ் மக்களையும் மஹிந்த ராஜபக்ச புலிகளாகவே பார்த்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முதலில் தன்னையே கொலை செய்திருப்பார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு மக்கள் பலம் ஒரு போதும் இல்லை. பொலிஸ் மற்றும் படையினரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலம். அத்துடன், மோசடியாக சம்பாதித்த பண பலம் என்பனவே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.