Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

அமெரிக்க இளம்பெண்ணுடன் சாட்டிங் செய்த இளைஞன் -சிறையிலடைத்த சவூதி போலீசார் ! - வீடியோ


சவுதி போலீசார்  இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரும் எதிர்மறையான எண்ணத்தை தூண்டும் வகையில் சமூகவலைத்தளத்தில் நடந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் குடியிருக்கும் அபு சின் என்ற சிறுவன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடியிருக்கும் 21 வயதான கிறிஸ்டீனா என்பவருடன் நேரலையில் சாட் செய்துள்ளார்.

இதில் சுவாரசியம் என்னவெனில் கிறிஸ்டீனா பேசும் ஆங்கிலம் அபு சின் என்பவருக்கு புரியவில்லை. அபு சின்னுக்கு அரேபிய மொழி மட்டுமே பேசத்தெரியும்.

ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் மொழி மறந்து சுவாரசியமாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பல ஆயிரம் பேர் பார்த்து தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே வைரலான இந்த வீடியோவை பார்த்து சவுதி போலீசார் கடந்த ஞாயிறு அன்று அபுவை கைது செய்துள்ளது. கைது செய்யப்படும்போது குவைத்தில் உள்ள இன்னொரு நண்பருடன் அபு தனது வாகனத்தில் வைத்து இதுபோன்று பேசிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

சவுதி அரசு இதுபோன்று பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அங்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளையும் அந்த அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.