Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

போலி வாகன காப்பீடு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கன்னியாகுமரியில் கைது



போலி வாகன காப்பீடு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை கன்னியாகுமரியில் போலீஸார் கைது செய்தனர்.

திட்டுவிளை பகுதியில் வசித்து வரும் ஜோசப் ஜீவா, தனக்குச் சொந்தமான மினி லாரிக்காக, வாகன வரி கட்டச் சென்றுள்ளார். அப்போது, தனது வாகனத்திற்கு வழங்கப்பட்ட காப்பீடு போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து காப்பீடு எடுத்துக் கொடுத்த முத்துராஜ் என்பவரிடம் இதுபற்றி ஜீவா கேட்டுள்ளார். அவர் முறையாக பதிலளிக்காததால் சந்தேகமடைந்த ஜீவா காவல்நிலையத்தில் ஜோசப் மீது புகார் அளித்துள்ளார். போலீஸார் முத்துராஜிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கடந்த 3 ஆண்டுகளாக போலி வாகன காப்பீடு மூலம் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனால் முத்தராஜை கைது செய்த போலீஸார், போலி காப்பீடு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட லேப் டாப், ரப்பர் ஸ்டாம்ப் போன்றவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய  நபர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.