October 16, 2016
ரேஷன் கடையாக மாறும் தபால் நிலையங்கள்!
நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்வது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தலைநகர் புதுடெல்லியில், மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் ஹேம் பாண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பண்டிகைக் காலங்களையொட்டி பருப்பு வகைகள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைப்பதற்கு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் 1.54 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இதில் 1.39 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு பருப்பு வழங்க வேண்டிய ரேசன் கடைகளை இழுத்து மூடிவிட்டு, தபால் தலை விற்க வேண்டிய அஞ்சலகத்தில் பருப்பு விற்கப் போகிறது என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்
ரேஷன் கடையாக மாறும் தபால் நிலையங்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.