Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி



குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் அவர் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசியபோது, காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற மோசடி பேர்வழிகளை ஒழித்து, அரசியலை சீரமைக்கும் விதமாக, அடுத்த ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி களம் இறங்குவதாகக் குறிப்பிட்டார்.

குஜராத்தில் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியதாக, ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், நேரில் வந்து பார்த்தால் மட்டுமே, மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் ஆட்சி எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை உணர முடிவதாகவும், அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.