Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

கொலை மிரட்டல் வழக்கில் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து முன்ஜாமின் மனு தள்ளுபடி!



பைனான்சியர் மோகன் குமாருக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கில், எஸ்.ஆர்.எம் பச்சமுத்து முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு SRM பச்சமுத்து, வள்ளியம்மை அறக்கட்டளைக்காக சென்னையை சேர்ந்த மோகன்குமார் என்ற பைனான்சியரிடம் 70 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும், திருப்பிக் கேட்டபோது, மோகன்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கடந்த ஜூலை மாதத்தில் வேப்பேரி காவல் நிலையத்திலும், மாநகர காவல் ஆணையாளரிடமும் மோகன்குமார் புகார் அளித்துள்ளார். தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மோகன்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி, SRM பச்சமுத்து தொடர்ந்த வழக்கில், காவல்துறை சார்பில் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி நஷீர்அகமத், பச்சமுத்து மீதான முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.