Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

நிலத்தகராறு காரணமாக உணவில் விஷம் வைத்து மூவர் படுகொலை!



கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே நிலத்தகராறில் உணவில் விஷம் வைத்து இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

ராயக்கோட்டை அருகே உள்ள நல்லூரை சேர்ந்த  சுகுமார்- வள்ளி தம்பதியருக்கு, 7 வயதில் ஜீவா என்ற மகனும், 4 வயதில் பூஜா என்ற மகளும் இருந்தனர். சுகுமார் தமது மாமியார் கோவிந்தம்மாள் வீட்டின் அருகே வசித்து வருகிறார்.

இதனால் பாட்டி வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு சுகுமார் வேலைக்கு செல்வார். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி இரவு, 2 குழந்தைகளுக்கு கோவிந்தம்மாள் சப்பாத்தி செய்து கொடுத்துள்ளார். மேலும் அருகில் வசித்து வரும் 93 வயது முதியவர் முனியப்பனும் சப்பாத்தி சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் முதியவர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதில் முனியப்பன் ராயக்கோட்டை மருத்துவமனையில் உயிரிழந்தார். இதேபோல் குழந்தைகள் ஜீவா மற்றும் பூஜாவும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஜீவா உடலை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமக நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த முருகன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் வள்ளியின் சகோதரர் பைரன் என்பவருக்கும், முருகனுக்கு நிலத்தகராறு இருந்து வந்ததது தெரிய வந்தது. இந்நிலையில் பைரனை பழிவாங்க அவர் வீட்டில் இருந்த சப்பாத்தி மாவில் முருகன் அரளி விதையை அரைத்து வைத்தது தெரியவந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.