Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 27, 2016

ரயில் நிலையங்களில் ஆபாச படம் பார்க்கும் பயணிகள். பாட்னா ரெயில்வே அதிரடி



ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வைபை வசதியை பயன்படுத்தி ஆபாச படங்கள் பார்ப்பதாக வெளிவந்த புகாரை அடுத்து பாட்னா ரெயில் நிலையத்தில் வைபை மூலம் ஆபாச படங்களை பார்பதற்கு தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் 23 ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக இலவச வைபை இன்டர்நெட் வசதி ரெயில்டெல் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம் வை-பை இன்டர்நெட் சேவையை பயன்படுதும் ரெயில் நிலையமாக பாட்னா ரெயில் நிலையம் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பாட்னா ரெயில் நிலையத்தில் வைபை அறிமுகம் செய்யப்பட்டது முதல் இங்கு பெரும்பாலோனோர் ஆபாச தளங்களைப் பார்வையிடவே இணைய வசதியை பயன்படுத்துகின்றனர் என்றும், யூ-டியூப், விக்கிபீடியா இரண்டையும் அதிகமான பேர் பார்வையிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
வைபை வசதி அதிகம் பயன்படுத்தப்படும் ரெயில் நிலையங்களில் 2-வது இடத்தை ஜெய்ப்பூர் ரெயில் நிலையமும், 3-வது இடத்தை பெங்களூரும், 4-வது இடத்தை புதுடெல்லியும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.