Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

சட்டமன்றக் குழுக்களை அமைக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது அதிமுக அரசு: கருணாநிதி



சட்டமன்றக் குழுக்களை அமைக்க முடியாமல் அ.தி.மு.க அரசு குழப்பத்தில் உள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியை முன்னிட்டுத் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அக்டோபர் மாதச் சம்பளம் 28ஆம் தேதியே வழங்கப்படும் என்று அறிவித்ததையும், பின்னர் 31ஆம் தேதிதான் வழங்கப்படும் என்று அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே  சட்டப் பேரவைக்கான 12 குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று, குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு, முதல் கூட்டத் தொடரில், இந்தக் குழுக்களை அமைக்க மறந்து விட்டார்கள் என்றும்,  இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றும் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.