Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 11, 2016

ஐ.எஸ் தொடர்பு: பிரபல கவர்ச்சி மொடல் அதிரடி கைது!



பிரித்தானியாவின் கவர்ச்சி மொடல் கிம்பர்லி ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு காரணமாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய கவர்ச்சி மொடல் கிம்பர்லி ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் சமூகவலைதளம் வாயிலாக தொடர்பு கொண்டதாகவும், அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் பிரித்தானிய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளன.
இதனையடுத்து அவரை கண்காணிப்பில் வைத்திருந்த MI5 மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார் தற்போது அவரை அதிரடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வெள்ளியன்று கைது செய்யப்பட்ட மொடல் கிம்பர்லி ஏற்கனவே பல முறை உரிய அதிகாரிகளால் எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைடையே குறிப்பிட்ட மொடலின் Bradford பகுதி குடியிருப்பை சோதனையிட்ட பொலிசார் அவரை பிணையில் விடுவித்துள்ளனர். மட்டுமின்றி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற உறுதியின் அடிப்படையிலேயே உளவுத்துறை மொடல் Kimberley Miners ஐ விடுவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய Kimberley Miners குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆயுதம் தாங்கிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது.
ஆனால் குறித்த புகைப்படம் போலியானது எனவும் தாம் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை எனவும் மொடல் கிம்பர்லி தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் பத்திரிகை ஒன்றில் கிம்பர்லியின் நிர்வாண புகைப்படம் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.