Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

இனி ஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது : பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அதிரடி



பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெட்ரோல் கொள்முதல் நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் சில்லரை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு, கமிஷன் தொகை உயர்த்தி தராததைக்கண்டித்து, இந்த போராட்டம் நடத்தப்படுவதாக, சேலத்தில் அச்சங்கத்தின் தலைவர் முரளி தெரிவித்தார்.
நவம்பர் 5 ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் வகையில் நேரம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதன் பிறகு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்தார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.