October 19, 2016
சாத்தூரில் அரசு பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்
சாத்தூரில் அரசுப் பேருந்தில் பயணித்தவரை சுட்டுக் கொன்ற நபர், பயன்படுத்திய துப்பாக்கி, குளத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த முகமது ரபீக்கின் உறவினர் மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கருப்பசாமியை கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியை, ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு குளத்தில், வீசியதாக மகாலட்சுமி தெரிவித்தார்.
இதனையடுத்து, அந்த குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்தனர். இந்த வழக்கில் சரணடைந்த முகம்மது ரபீக், சாத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் கீதா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர். இதனையடுத்து, 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தூரில் அரசு பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.