Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

மனை­வி­யின் நடத்­தையில் சந்­தேகம் : கொலை செய்து துண்டு துண்­டாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து வீசிய கணவ



நடத்­தையில் சந்­தேகம் ஏற்­பட்­டதால் காதல் மனை­வியை கொன்று, துண்டு, துண்­டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப் பகு­தியில் டாக்டர் ஒருவர் வீசிய சம்­பவம் ஆந்­தி­ராவில் பர­ப­ரப்பை ஏற்படுத்தி­யுள்­ளது.
ஆந்­தி­ராவின் தர்­ம­வரம் பகு­தியைச் சேர்ந்­தவர் ஓய்வுப் பெற்ற கூட்­டு­றவு வங்கி அதி­காரி நட்­டய்யன். இவ­ரது 4ஆவது மகள் வினிதா (28).
இவரும் சித்தூர் மாவட்டம், கலி­கி­ரியைச் சேர்ந்த சுதீர்­குமார் பாபு என்­ப­வரும் கடந்த 4 ஆண்­டுக­ளுக்கு முன்பு காத­லித்து திரு­மணம் செய்து கொண்­டனர்.
சுதீர்­குமார் நெல்லூர் அரவிந்த் நகரில் மனை­வி­யுடன் தங்கியிருந்து அங்­குள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்­லூரி வைத்­தி­ய­சா­லையில் டாக்­ட­ராக பணி­யாற்றி வந்­துள்ளார். இவர்­க­ளுக்கு குழந்தைகள் இல்லை.
இந்­நி­லையில் வினி­தாவின் நடத்­தையில் கடந்த சில மாதங்­க­ளாக சுதீர்­குமார் பாபு­வுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் இரு­வ­ருக்கும் இடையே அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­துள்­ளது.
இத­னி­டையே கடந்த 28ஆம் திகதி இரவு இரு­வ­ருக்கும் இடையே மீண்டும் தக­ராறு ஏற்­பட்­டதாம். இதில் கோப­ம­டைந்த சுதீர்­குமார், வினி­தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்­துள்­ளார்.
பின்னர், தனது மாமனார் நட்­டய்­ய­னுக்கு தொடர்பு கொண்டு, வினி­தா­வுக்கும், தனக்கும் ஏற்­பட்ட தகராறில் வினி­தாவை கொலை செய்து விட்­ட­தாக கூறி­விட்டு போனை துண்­டித்­துள்ளார்.
இதனால் பதற்­ற­ம­டைந்த நட்­டய்யன், வினி­தா­வைத் தொடர்பு கொண்­டுள்ளார். ஆனால் தொலை­பேசியை எடுக்­கா­த மையால், உட­ன­டி­யாக அவர்கள் அவ­சர பொலிஸ் பிரி­வுக்கு செய்து தகவல் கொடுத்­துள்ளார்.
அதன்­பேரில் நெல்லூர் பொலிஸ் நிலைய இன்ஸ்­பெக்டர் மற்றும் பொலிஸார் இருவர் சுதீர் குமாரின் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர். அங்கு யாரும் இல்­லா­ததால், சுதீர்­கு­மாரை பல இடங்­களில் தேடி­யுள்ளார்.
இந்­நி­லையில் கடந்த 30ஆம் திகதி நெல்­லூரில் வேறு ஒரு பகு­தியில் தலை
ம­றை­வாக இருந்த சுதீர்­கு­மாரை கைது செய்த பொலிஸார் அவ­ரிடம் விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர்.
இதன்­போது அவர் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, “மனைவி வினிதா மீது ஏற்­பட்ட சந்­தே­கத்தால் அவரை கொலை செய்து, சட­லத்தை துண்­டு ­க­ளாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து ஆட்டோவில் எடுத்­துக்­கொண்டு நெல்லூர் பஸ் நிலையம் கொண்டு சென்றேன்.
பின்னர், திருப்­ப­திக்கு பஸ்ஸில் கொண்டு சென்று, அங்­கி­ருந்து ஒரு ஆட்­டோ வில் சட­லத்தை எடுத்­துக்­கொண்டு சந்­தி­ரி­கிரி மண்­டலம் பாக்­ரா­பேட்டை அருகே உள்ள காட்­டுப்­ப­கு­திக்கு கொண்டு சென்று சுமார் 20 அடி பள்­ளத்தில் வீசி­விட்டு வந்தேன்” என தெரி­வித்­துள்ளார்.
இத­னை­ய­டுத்து நெல்லூர் பொலிஸார் கொடுத்த தக­வ­லின்­பேரில் வனப்­ப­கு­தி க்கு சென்று அழு­கிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, சடலத்தை நெல்லூர் பொலி­ஸா­ரி­டம் ஒப்படைத்தனர். இதையடுத்து நெல்லூர் பொலி­ஸார் சுதீர்குமார் பாபுவை கைது செய்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.