Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

ஒரு வயது குழந்தையின் உயிரை பறித்த வெங்காயம்



வெங்காயம் சுவாசப்பாதையில் மாட்டிக் கொண்டதால் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
கர்நாடாகவைச் சேர்ந்த கல்பேஷ் மற்றும் அர்ச்சனா தம்பதிகளுக்கு நித்யஸ்ரீ என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.நேற்று வீட்டின் முற்றத்தில் வெங்காயத்தை காய வைத்திருந்த அர்ச்சனா,மற்ற வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.அப்போது வீட்டிற்குள் விளையாடிய நித்யஸ்ரீ,யாரும் கவனிக்காத நேரத்தில் வீட்டின் முற்றத்தில் காய்ந்து கொண்டிருந்த வெங்காயத்தில் ஒன்றை எடுத்து முழுங்கியுள்ளாள்.
மூச்சுக்குழாயில் வெங்காயம் அடைத்துக் கொண்டாததால்,மூச்சுவிட முடியாத நித்யஸ்ரீ மயக்கமடைந்துள்ளாள்.குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த அர்ச்சனா,45 நிமிடங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமடைந்துள்ளதை அறிந்து,அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார்.ஆனால் குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக ,கொஞ்சம் முன்னர் கொண்டு வந்திருந்தாலும் காப்பாற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சிறு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை.தயவு கூர்ந்து குழந்தைகளுக்கு எட்டும் இடங்களில் பொருட்களை வைக்காதீர்கள்.குழந்தையை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.