October 17, 2016
மருத்துவர்களுக்கு நன்றி கூறிய ஜெயலலிதா!: ஆங்கிலத்தில் பேசினார்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 20 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் ஆங்கிலத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா பேசிய போது, லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலே, எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் அங்கு இருந்தார்கள். அவர்களிடம் பேசிய ஜெயலலிதா, நீங்கள் எனக்கு அளித்த நல்ல சிகிச்சைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மருத்துவர்களும் அவரது நன்றியை ஏற்றுக்கொண்டு முதல்வருக்கு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவர்களுக்கு நன்றி கூறிய ஜெயலலிதா!: ஆங்கிலத்தில் பேசினார்?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.