October 28, 2016
கண்ணூரில் நடைபெறும் கலவரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்! – முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த சில மாதங்களாகவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் கம்யுனிஸ்ட் இடையே ஆயுத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.இதில் சில கொலைகளும் அடங்கும்.தற்போது அங்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரால் ஓர் கம்யுனிஸ்ட் நிர்வாகி கொல்லபட்டதற்கு அங்கு பதற்றம் நிலவும் நிலையில்.ஆர்.எஸ்.எஸ் தனது வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டது. கண்ணூரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு ஆர்எஸ்எஸ், பாஜகவே காரணம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது ‘‘கண்ணூரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னதாக மாவட்ட அளவிலான அமைதிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். தேவை என்றால் மாநில அளவிலான கூட்டத்தை கூட்டலாம். கண்ணூரில் நிலவும் தற்போதைய சூழலுக்கு ஆர்எஸ்எஸ்ஸின் அணுகுமுறையே காரணம். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் இணைந்து வேண்டுமென்றே பிரச்சினையை தூண்டிவிடுகின்றன. பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் வெடி குண்டுகளையும், ஆயுதங்களையும் தயாரிக்கிறது’’ என்றார்.
கண்ணூரில் நடைபெறும் கலவரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்! – முதலமைச்சர் பினராயி விஜயன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.