மக்கள் திலகம் அவர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நேரம் அது. அவர் அமெரிக்கா சென்று திரும்பியதும் மீண்டும் அரியணையில் அமர்ந்தார்.
உடல் நலம் வாட்டியபோதும் மக்கள் பணியில் அவர் தீராத உழைப்பைக் காட்டினார்.
அவர் அங்கிருந்த போது தேர்தல் களத்தில் ஜெ.அவர்கள் ஆற்றிய களப்பணியை எதிரிகள் மக்கள் திலகத்திடம் மறைத்து விட்டதோடு, சில அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் ஜெ.அவர்கள் மீது வைத்தனர்.
ஆனால் எம்ஜிஆர் அவர்களிடம் எதையும் மறைக்க முடியாது அவருக்கு ஜெ அவர்களின் கடும் உழைப்பு எடுத்து கூறப்பட்டுள்ளது. அவர் ஒருநாள் மிக சோர்வாக காணப்பட்டார்.
அப்போது அம்முவை பார்க்கவேண்டும் என்று சொன்னபோது ஜெ. அவர்கள் போய் பார்த்தார்களாம். எம்ஜிஆர், ஜெ.அவர்களிடம் ஒரு வாக்குறுதி கேட்டார்கள்.
அம்மு எனக்கு பின் நீதான் கட்சி. நீதான் ஆட்சி. ஆனால் இரண்டு பேரை கைவிட்டு விடாதே, அதுமட்டுமல்ல எனக்காய் உயிரையும் கொடுக்கும் தொண்டர்களை காப்பாற்று. அவர்கள் இல்லையேல் நீ, நான் இல்லை. என்று மனமுருக கேட்டாராம்.
அதை ஏற்றுக்கொண்ட ஜெ அவர்கள் இன்றுவரை அதை கடைப்பிடித்து வருகிறார். அந்த ‘இரண்டு’ பேரை ஜெ அவர்கள் அரவணைத்தும் கூட அவர்களின் துரோகமே வெளியேற செய்யது விட்டது…!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.