Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 27, 2016

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்!



ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்கலாம் என மாநில நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கவில்லை எனில், அடுத்த மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது என நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், சென்னை லாயிட்ஸ் காலனி மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் உள்ள அமுதம் மற்றும் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ்,  ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கா விட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க, காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை எனவும் அவர் கூறினார். பொருட்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்றும் காமராஜ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.