Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 11, 2016

திருமணமான நாளே மனைவியின் தோளில் உயிர் விட்ட கணவரின் சோகக் கதை



குருநாகல் - இப்பகமுவ பகுதியில் திருமணமாகிய அடுத்த நாளே மணமகள் தோளில் விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வருடமாக காதலித்த தன் மனைவியை கரம் பிடித்த அந்த மணமகன் இசுறு சம்பத்(25) தான் சோர்வாக இருப்பதாக உணர்ந்துள்ளார்.

பின்னர் குறித்த மணமகன் இறுதியாக தனது மனையிவியின் தோள் மீது சாய்ந்து மயக்கமுற்றவர் போல் இருந்துள்ளார்.

ஏதோ நடக்கின்றது என உணர்ந்து கொண்ட மனைவி, திடீரென கூச்சலிட்டு அனைவரையும் அழைத்து மணமகனை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சோர்வு, தூக்கமின்மை, பசி காரணமாக மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனின் இந்த மரணம் மணமகள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.