நம் முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானியங்கள் தொடங்கி இன்றைய தலைமுறையினர் விரும்பி சாப்பிடும் பீட்சா, பர்கர் வரை காலத்திற்கு ஏற்ப உணவுப் பொருட்களிலும் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இன்றைய சூழலில் உணவுப் பொருட்களின் ஆரோக்கியம், தரம் மட்டும்தான் கேள்விக்குறியாக இருக்கின்றது.
மளிகைக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் மளிகைப் பொருட்களாவது தரமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கின்றதா? இல்லை. ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் சாப்பிடும் உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில்தான் சமைக்கப்பட்டிருக்குமா? அரைத்த மாவில், சாம்பாரில் எதாவது பூச்சிகள் விழுந்திருக்குமோ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.
'இரசாயனம்', 'கலப்படம்', 'காலாவதி' இவை மூன்றும் நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுப் பொருட்களிலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நேரடியாகவோ, மறைமுகமாகவே நம்மைக் கடந்து செல்வதைத் தவிர்க்க முடியாத காலகட்டத்தில் வாழ்கிறோம். ஒரு கிலோ உணவுப் பொருளில் 100 கிராமில் தொடங்கி பல நூறுகிராம் அளவிற்கு குறையாமல் போலியான, தரமற்ற பொருட்களை சேர்த்தல் எப்படி நியாயம். இது தெரியாமலேயே ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான நுகர்வோர் ஏமாந்துகொண்டே இருக்கின்றனர். இதில் உணவுப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (Food Safety and Standards Authority of India) சட்டங்களை வகுத்து பாதுகாப்பான உணவை வழங்கி, மக்களின் நலத்தைக் காக்கும் கடமையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நம் நாட்டில் தேவையான சட்டங்கள் இருக்கிறது. ஆனால், அவற்றை நடைமுறை படுத்துவதில்தான் தோல்வியே. அதுபோல நாட்டின் சுகாதார அமைச்சகம் தொடங்கி, மாநில சுகாதாரம் அமைச்சகம், உள்ளூர் சுகாதார ஆய்வாளர் வரை பல கட்டங்களாக மக்கள் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தரமான சேவைதான் மக்களுக்கு சென்றுசேருவதில்லை. இதனால் பல இடங்களில் நுகர்வோராகிய நாம் தோல்வியடைகிறோம். பல்வேறு பொருட்களின் தயாரிப்பு நிர்வாகிகளும், விற்பனையாளர்களும் அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டியவற்றை கொடுத்து தங்களின் தரமற்ற, போலியான உணவுப் பொருட்களை மக்களை ஏமாற்றி விற்பனை செய்து காரியத்தை சாதிக்கிறார்கள். தெரிந்தே மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறார்கள்.

இதற்கு சமீபத்திய உதாரணம், சில நாட்களுக்கு முன் சென்னை, குரோம்பேட்டையில் தந்தை-மகன் இருவர் தனியார் பால் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டினை வாங்கி உணவு சாப்பிட்டனர். பாதி உணவை சாப்பிட்ட நிலையில்தான் தெரிந்தது, அந்த தயிர் பாக்கெட்டில் இறந்த நிலையில் அட்டை பூச்சி இருப்பது. தந்தை-மகன் இருவரும் அடுத்த சில மணிநேரங்களில் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்களை காண அதிகாரிகள் விரைந்தனர். இது ஒரும்புறமிருக்க எண்ணெய், தானியங்கள், மசாலா பொருட்கள் என அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்கள், 'அக்மார்க்' எனப்படும் மத்திய அரசின் வேளாண் பொருட்களுக்கான சான்றிதழைப் பெற்றுதான் விற்பனைக்கு வரவேண்டும். ஆனால் முறையான சான்றிதழைப் பெற்றும், பெறாமலும் ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
நம் உணவுப் பொருட்களுக்கான பாதுகாப்பை அச்சுறுத்தும் 'முறையான கண்காணிப்பு திட்டமில்லாமை, பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டிற்கான விழிப்பு உணர்வு இல்லாமை ஆகியவற்றின் காரணமாக, உணவு சார்ந்த நோய்களும் அதிகரித்து வருகின்றன'. பலரது பசியை ஆற்றும் உணவு விஷயம் என்பதால் சம்மந்தப்பட்ட உணவுப் பொருள் நிர்வாகிகளே தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை உறுதிசெய்ய வேண்டும். அதைச் சோதித்து தவறு நடக்காமலும், நடந்தால் சம்மந்தபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டிய அரசும், அரசு அதிகாரிகளும் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும். ஊழலும், முறைகேடுகளும் புரையோடிப்போன நம் நாட்டில் நுகர்வோராகிய நாமும் விழிப்புடன் தரமான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கி, நம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம
நுகர்வோராகிய நாம் செய்ய வேண்டியவை:
* நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் தரமற்றதாக, கலப்படமானதாக இருப்பதாக நினைத்தால் அருகிலுள்ள ஃபுட் லெபாரட்டரிக்கு அவற்றை அனுப்பி சோதனை செய்யுங்கள். சோதனையின் முடிவில் அவை தரமற்று இருப்பது உறுதியானால் அந்தப் பொருளை விற்பனை செய்தவர், அந்த நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணமும் பெறலாம். தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதை நம்மாள் இயன்ற அளவுக்கு குறைக்கலாம்.
* நம் குடும்ப நபர்கள், நண்பர்கள் யாராவது தரமற்ற, ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் சம்மந்தபட்ட கடைக்காரர் மற்றும் நிறுவனத்தின்மீது புகார் தெரிவிக்க வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.