Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 9, 2016

மனதை பதைபதைக்க வைத்த திருகோணமலை சிறுவனின் கொடூர கொலை



திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் விதுர கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் பெரியகல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் நேற்று அதிகாலை 12.10 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டு இருந்தார்.

கொடூர பாலியல் வன்புணர்வின் பின்னரே குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முன்னதாக சிறுவனை தேடிச் சென்ற மக்கள் கடற்படை முகாம் அருகே அமைந்துள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் உள்ளே பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக கூறியுள்ளனர்.

கடற்படையினர் பயன்படுத்தும் சப்பாத்தின் லேஸ் இனாலேயே குறித்த சிறுவனின் உடலும், கல்லும் பிணைக்கப்பட்டுள்ளன.

தர்சன் காணாமல் போன நாளன்று கடைசியாக இலங்கை கடற்படையினர் தான் அழைத்து சென்றதாக நேரில் பார்த்த சிறுவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள இராணுவ காவலரணில் சிறுவனுக்கு சொக்லேட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

தர்சனை ஓரின சேர்க்கைக்குள்ளாக்கி இலங்கை கடற்படையினர் கொலை செய்துவிட்டு கிணற்றில் போட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் தான் தர்சனின் குடும்பம் சம்பூரில் மீள்குடியேறியுள்ளது. இவர் குறித்த குடும்பத்தின் கடைசிப் பிள்ளை (மூன்றாவது குழந்தை) ஆவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திலிருந்து இராணுவத்தை அகற்றாமல் அப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றிய ஜனாதிபதியே இக்கொடூரக் கொலைக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டுமென புத்தியீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இலங்கை அரச இயந்திரத்தின் தமிழின அழிப்பின் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.