October 17, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குடியரசுத்தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தினர்.
திமுக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர், குடியரசுத் தலைவரை டெல்லியில் இன்று சந்தித்தனர்.
அப்போது, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா காவிரியில் திறந்து விடாதது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தனர்.
மேலும், இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தங்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார் என தெரிவித்தார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குடியரசுத்தலைவரிடம் திமுக எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.