October 14, 2016
காவல் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக தீவிர விசாரணை!
கொட்டாம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் உள்ள கிணற்றில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையம் முன்புறம் உள்ள கிணற்றில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அருகில் இருந்த வீடுகளில் உள்ள கண்ணாடிகளும் உடைந்தன.
மேலும் குண்டுவெடித்த சத்தம், சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காவல் நிலைய வளாகத்தில் உள்ள கிணற்றில் வெடித்தது, தகவலறிந்த மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஸ் மீனா சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
மேலும், தடயவியல் துறை உதவி இயக்குநர் காஜா மைதீன், வெடிகுண்டு செயலிலக்கப்பிரிவினர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வின் போது ஒருசில வேதியியல் மூலப்பொருட்களை கைப்பற்றியதாகவும், எந்த வகையான வெடிபொருள் என்பது பற்றி ஆய்விற்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
காவல் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக தீவிர விசாரணை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.