Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 30, 2016

நாகரீக? கோ.....மாளிகள்...


கௌதமியை மோடி சந்தித்தார் ..
இதுவெறும் செய்தியல்ல.. மோடி என்கிற தனிநபர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் அது அவரின் உரிமை.. யாரும் கேள்வி கேட்கபோவதில்லை.. பிரதமரான மோடி கௌதமியை சந்தித்தார்.... சந்திக்க கூடாதா என்றால் இல்லை சந்திப்பதில் எந்த தவறுமில்லை.. 24 மணிநேரமும் ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதாக ஊடகங்கள் கட்டமைக்கிற பிம்பத்திற்கு சிறு ஓய்வு தேவைதான்.. குடும்பமில்லாதவரின் ஒப்பற்ற சேவையில் சிறு மனமகிழ்வு திரை கலைஞர்களை சந்திப்பதால் வருமெனில் வரவேற்போம்..
..
ஆனால்..
நாட்டின் மிக முக்கியமான இரு மாநில பிரச்சனைக்காக ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்சனையைப்பற்றி சந்தித்து முறையிட 50 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என்ற போது .. அதெற்கெல்லாம் நேரமில்லாமல் போனது.. திமுக சேர்ந்த நாடாளுமன்ற ஆளுமைகள் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டும் இன்னமும் அதற்கான நேரமில்லை என்கிற நிலையில்.. முன்னாள் நடிகையும் இந்நாள் சமூகஆர்வலரும்(இப்படிதான் சமூகஆர்வலர்கள்உருவாகிறார்கள்) தொலைக்காட்சி (ரிக்கார்ட் டான்ஸ்) நடனபோட்டியின் நீதிபதியுமான கௌதமியை சந்தித்திருக்கிறார்..
..
ஏற்கனவே கஜோலை சந்தித்து நாட்டின் பிரதான பிரச்சனைகளை பேசியதைப்போல திருமதி.கௌதமியையும் சந்தித்து தமிழ்நாட்டின் தீர்க்கமுடியாத சிக்கல்கள் நிறைந்த விடயங்கள் குறித்து கலந்தாலோசித்தார்.. ஒரு வேளை கௌதமியின் நெருங்கிய நண்பரும் பகுத்தறிவாளருமான( என்ன பகுத்தறிவுக்கு வந்த சோதனை) திரு.கமல்ஹாசனை இந்திய தூய்மைத்திட்டத்திற்கு அழைத்ததைப்போல ஏதேனும் மாபெரும் புரட்சித்திட்டத்திற்கு தலைமையேற்க அழைத்திருக்கலாம்.
யார் கண்டார்கள்..
..
பாஜகவின் அருண்ஷோரி சொன்னதைப்போல
விடுதலை இந்தியா மோடியைப்போல ஒரு பிரதமரை கண்டதில்லை..
என்னசெய்ய 58 இன்ச் மார்பளவு எல்லாம் தகுதியென பிரச்சாரம் செய்ததை ஏற்றுக்கொண்ட நம்மால்.. வேறெதை எதிர்பார்க்கமுடியும்..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.