October 15, 2016
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி வழங்க கோரிக்கை!
சந்தனக் கடத்தல் வீரப்பனின் 12ஆவது நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவினை வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது கணவர் வீரப்பனின் 12வது நினைவு தினம் வரும் 18ம் தேதி வர உள்ளதாகவும், அதனை முன்னிட்டு, மேட்டூர் பேருந்து நிலையத்தில் பேனர் வைக்கவும், உடல் புதைக்கப்பட்ட மூலகாடு மயானத்தில் அன்னதானம் வழங்கவும் அனுமதி வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
இது தொடர்பாக மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் தான் அனுமதி கோரியதாகவும், அனுமதி அளிக்க கடந்த 7ம் தேதி அவர் மறுத்துவிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், வழக்கின் விசாரனையை தசரா விடுமுறைக்குப் பிறகு எடுத்துக் கொள்வதாக கூறி வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி வழங்க கோரிக்கை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.