October 4, 2016
டெல்லியில் பரபரப்பு அ.தி.மு.க எம்.பிக்களை மோடி சந்திக்க மறுப்பு பிரதமர் அலுவலகம் முன் அ.தி.மு.க எம்.பிக்கள் போராட்டம்
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை திறக்க தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் பிறப்பித்து வரும் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வருகிறது. மேலும் தொடர்ந்து கர்நாடக சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி தண்ணீர் திறக்க மறுத்து வெளியிட்டு வருகிறது.
இதனால், கோபமடைந்த நீதிபதிகள், கர்நாடக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியதோடு, 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு, கடந்த 30ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு, தற்போது பின்வாங்கியுள்ளது.
காவிரி நீர்திறப்பை உறுதி செய்யவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை நேரில் வலியுறுத்த அ.தி.மு.க. கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.,க்கள் அனைவரும் டில்லிக்கு சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பிரதமர் மோடியை இன்று சந்திக்க திட்டமிட்டனர்.
அதற்காக அ.தி.மு.க எம்பி.க்கள் துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு பிரதமர் இல்லை. அ.தி.மு.க எம்பிக்கள் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அ.தி.மு.க எம்.பிக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க எம்.பிக்கள் சந்திக்க அனுமதிக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தம்பிதுரை தலைமையில் 5 எம்.பிக்கள் பிரதமர் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.
டெல்லியில் பரபரப்பு அ.தி.மு.க எம்.பிக்களை மோடி சந்திக்க மறுப்பு பிரதமர் அலுவலகம் முன் அ.தி.மு.க எம்.பிக்கள் போராட்டம்
Reviewed by மறத்தமிழன்
on
October 04, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
October 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.