Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

கோவாவில் வாசனை பொருள் தயாரிப்பாளர் மோனிகா குர்தே பலாத்காரம் செய்து படுகொலை



பனாஜி: கோவாவில் பிரபல நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மோனிகா குர்தே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களில் ஒருவர் மோனிகா குர்தே (வயது 39). கோவாவை சேர்ந்த இவர் சாங்கோல்டா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் தான் புரோவோரிம் கிராமத்தில் இருந்து இங்கு இடம்மாற்றி வந்து உள்ளார். இந்த கிராமம் பிரபல சுற்றுலா தலமான காலன்குயிட் கடற்கரை அருகே உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை இவரது படுக்கையறை திறக்காமல் இருந்தது. வீட்டு வேலையாள் சந்தேகமடைந்தார்.
உடன் அவரது அறையின் கதவை உடைத்து பார்த்த போது நிர்வாண நிலையில் படுக்கையில் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் மேலும் கூறுகையில், எங்களுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. நாங்கள் அவரது உடலை நிர்வாண நிலையில் கண்டோம். வீடு கொள்ளையடிக்கபட்டு உள்ளது. அவரது கை மற்றும் கால்கள் படுக்கையுடன் கட்டப்பட்டு இருந்தது. தனியாக இருந்த அவர் வீட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.