Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 28, 2016

இப்படி கூட மரணம் வருமா?…. பதற வைக்கும் சம்பவம்…



இங்கிலாந்தில் நான்கு வயது சிறுவன் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த Maison Hirstle என்ற 4 வயது சிறுவன் வீட்டில் தனது 16 வயது சகோதரனுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த தொப்பி கதவின் பிடியில் சிக்கியதில் Maison Hirstle-லின் தலை கதவில் மோத அவர் சட்டென்று மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைக்கண்ட அவனது சகோதரன் தம்பியை தூக்கிக்கொண்டு தந்தையிடம் சென்றுள்ளார். பதறிப்போன தந்தை ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க Maison Hirstle மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர்கள், தலையில் காயம் ஏற்பட்டதால் சிறுவனின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். பின் சிறிது நேரம் கழித்து சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தியை அந்த குடும்பத்திடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவன் உயிரிழந்த செய்தி அந்த குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.