October 31, 2016
சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சமாதானம் செய்ய முயன்ற இளைஞர் கொலை
பழனியில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சமாதானம் செய்துவைத்த இளைஞர், கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவக்குமார், நேற்று தீபாவளி பண்டிகையை தனது மனைவியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த சுந்தரம் மற்றும் அவரது அண்ணன் பிரபு ஆகிய இருவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை சிவக்குமார் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சுந்தரம், கத்தியால் சிவக்குமாரை குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதில் தலைமறைவான சுந்தரத்தை, பழனி போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணன் - தம்பிக்கு இடையிலான தகராறை தடுக்கச் சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலியான சிவக்குமாருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சமாதானம் செய்ய முயன்ற இளைஞர் கொலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.