Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

போதை அடிமை மறுவாழ்வு மையத்தில் மேற்கொண்ட சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு



சேலம் அருகே குடி பழக்கத்திற்கு அடிமையான நபர், போதை அடிமை மறுவாழ்வு மையத்தில் மேற்கொண்ட சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம்  ஓமலூர் பேரூராட்சி  4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர்  40 வயதான கோவிந்தராஜ், குடிப்பழக்கத்தில்  இருந்து விடுபடுவதற்காக பல்வேறு கவர்ச்சி விளம்பரங்களை நம்பி கோவை உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த மையங்களில் சிகிச்சை பெற்ற போதிலும், அவரால் குடிபழக்கத்திலிருந்து விடுபட  முடியமால், நேற்று மீண்டும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக ஒமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போதை மறுவாழ்வு மையங்களில் உட்கொண்ட மருந்துகளின் பக்க விளைவு காரணமாகவே உயிரிழப்பு நேரிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.