Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

அறந்தாங்கி அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்ம மரணம்!



அறந்தாங்கி அருகே தனியார் நிறுவன பெண்  ஊழியரின் மர்ம மரணம் தொடர்பாக, சந்தேக நபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்த முத்துதுரை என்பவரின் மனைவி திவ்யா, தனது வீட்டின் பின்பக்கம் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், திவ்யாவின் உடல் அருகே கிடந்த செல்போனை கைப்பற்றினர். 

உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், சந்தேக நபர் ஒருவரிடம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த திவ்யா, நள்ளிரவில் எதற்காக வீட்டிற்கு வெளியே சென்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.