Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 27, 2016

பலாத்காரம் செய்த நபரை திருமணம் செய்துகொண்ட பெண்…! தற்போது நிலை என்ன தெரியுமா?….



ஹரியானா மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவரை திருமணம் செய்துக் கொண்ட பெண் ஒருவர் மாமியார் கொடுமை தங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஜாகத்ரி நகர் காவல் நிலையத்தில் அனுஜ் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மீது ஒரு பெண் புகார் அளித்தார். இதனால் அனுஜ் கைது செய்யப்பட்டார், வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், கிராம பஞ்சாயத்தாரின் தலையீட்டையடுத்து 7 மாதங்களுக்கு முன்னர் அனுஜ் தான் பலாத்காரம் செய்த அந்த இளம் பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டார்.
7 மாதங்கள் கடந்த நிலையில் அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அனுஜின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டும் , பாலியல் வழக்கிற்கு செலவு செய்த பணத்தை தரும்படியும் கொடுமைப்படுத்தி வந்ததால் தான் என் மகள் தற்கொலை செய்துக் கொண்டாள் என அந்த இளம் பெண்ணின் தாயார் அனுஜின் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.