October 25, 2016
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கெடுப்பது குறித்த அறிவிப்பை இன்று காலை வெளியிடுவதாக விசிக, மதிமுக அறிவிப்பு
திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று காலை முடிவு அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் அறிவித்துள்ளனர்.
திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மதிமுகவிற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே முரண்பட்ட கருத்து நிலவுவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனையும் நேற்று நேரில் சந்தித்து திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். நள்ளிரவு 12 மணிவரை நீடித்த இந்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று காலை முடிவெடுக்கப்படும் என அப்போது அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கெடுப்பது குறித்த அறிவிப்பை இன்று காலை வெளியிடுவதாக விசிக, மதிமுக அறிவிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.