Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 9, 2016

அழகான பெண்களை பார்த்தால் அத்துமீறுவேன். சர்ச்சைக்குள்ளானது டோனல்ட் டிரம்ப் பேச்சு



அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் தற்போது மீண்டும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பேசியுள்ளார். இதற்கு அமெரிக்காவில் அவருக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அவர் பேசியது இதுதான்: அழகான பெண்களிடம் நான் அத்துமீறி நடந்து கொள்வேன். பிரபல தொழிலதிபராக இருப்பதால் எனது அத்துமீறலை பெண்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வேறு வழியின்றி தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது மன்னிப்பு அறிக்கையில் ' நான் முட்டாள்தனமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்து என்னை மதிப்பிட வேண்டாம். நான் 100 சதவீதம் பரிசுத்தமான நபர் என்று கூறவில்லை. ஆனால் சிறந்த அதிபராக, குடிமகனாக இருப்பேன்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டபோது ஹிலாரியை கொடுமைப்படுத்தியுள்ளார். அடுத்த நேரடி விவாதத்தின்போது முழு விவரங்களையும் வெளியிடுவேன்' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது: ''இதுபோன்ற நபர் அமெரிக்காவின் அதிபராக மக்கள் அனுமதிக்கக் கூடாது''

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.