சராசரி மக்களும் வான் பயணம் மேற்கொள்ள 2-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறைந்த கட்டண விமான சேவையை மத்திய அரசு அறிமுகபடுத்த உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட புதிய திட்டப்படி ஒரு மணி நேர விமான பயணத்திற்கு ரூ.2,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்திற்காக 2-ம் நிலை நகரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களும் பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களும் இணைக்கப்பட உள்ளது.
புதிய திட்டத்திற்காக 2-ம் நிலை நகரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களும் பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களும் இணைக்கப்பட உள்ளது.
புதிய திட்டத்தில் பங்கேற்க உள்ள விமான நிறுவனங்களின் விமானங்களில் 50 சதவீத இருக்கைகள் 476 முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்திற்காக ஒதுக்கப்படும். அதாவது ரூ.2,500 கட்டணத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ளகூடியவை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.