Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

சித்திரவதை வழக்கு - பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க இளஞ்செழியன் உத்தரவு



2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கின் போது முன்னிலையாகாத பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இதன் போது கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த சந்தேகநபரை சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவரும் மேலதிக 7 பொலிஸாரும் இணைந்து சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்து கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசியதாக மல்லாகம் நீதிமன்றில் வாக்குமூலம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.