October 6, 2016
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் எரித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசைக் கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை உதாசீனப்படுத்தி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஊர்வலமும், ஆர்பாட்டமும் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், அதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது.
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.