Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 15, 2016

கணவரின் கொடுமை தாங்க முடியாமல் பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தமிழ் பெண் மீட்பு



கணவனின் கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவர் பொலிஸ் அதிகாரியொருவரால் மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் நொச்சியாகமையைச் சேர்ந்த 33 வயதான 4 பிள்ளைகளின் தாயொருவரே ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தனது 7 வயது மற்றும் பிறந்து 10 மாதங்களேயான குழந்தைகளுடனேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரது மற்றைய குழந்தைகள் 10 மற்றும் 16 என தெரிவிக்கப்படுகின்றது. கணவன் குடித்து விட்டு வந்து கொடுமை செய்வதாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் நீண்ட நாட்களாக குடிப்பதாகவும் , உழைக்கும் பணத்தை அதிலேயே செலவழிப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் , அப்பெண் நொச்சியாகமை பொலிஸில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.