Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 27, 2016

தந்தை ஒருவர் தனது மகளை கற்பழித்தவனுக்கு அதிரடி தண்டனை..!



 தந்தை ஒருவர் தனது மகளை கற்பழித்தவனுக்கு அதிரடி தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு பர்மிந்தர் சிங் என்பவரின் 17 வயது மகள் ஒரு மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து குற்றவாளி அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பர்மிந்தர் சிங்கிடம் வீடு வாங்கி தருகிறேன் வழக்கு சமரசம் செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். பின்னர், வீட்டை நேரில் காண்பிக்க பர்மிந்தர் சிங்கை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், வாகனத்தை பாதியிலே நிறுத்தி பர்மிந்தர் குற்றவாளியை மரத்தில் கட்டி வைத்து கையை கத்தியால் வெட்டி தப்பிச்சென்றுள்ளார்.
தற்போது, கற்பழிப்பு குற்றவாளி கையை இழந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான பர்மிந்தர் சிங்கை பொலிசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.